துமகூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமிகள் கவலைக்கிடம்

பெங்களூரு: கர்நாடகாவின் தும்கூரு சித்தகங்கா மடத்தின் மடாதிபதி  சிவக்குமாரசாமிக்கு தற்போது 111 வயதாகிறது. அவருக்கு முதுமை காரணமாக  அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. கடந்த மாதம்  சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா இன்ஸ்டியூட்  ஆப் மெடிக்கல் சென்டரில் பித்தப்பை அறுவை சிகிச்சை அளி்க்கப்பட்டது. இந்நிலையில்  கடந்த வாரம் மீண்டும் மடாதிபதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.  டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் அதையேற்க அவரது உடல்  ஒத்துழைக்கவில்லை. இதனால் மடாதிபதியின் வேண்டுக்கோள் ஏற்று அவரை  மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்து மடத்திற்கு அழைத்து  வரப்பட்டுள்ளார். அவரின் உடல் நிலை மோசமாகவுள்ளதாகவும்  டாக்டர்கள் கூறி உள்ளனர்.இதை தொடர்ந்து முதல்வர்  குமாரசாமி, துணைமுதல்வர் பரமேஸ்வர் உள்பட அமைச்சர்கள் நேரில் சென்று நலம்  விசாரித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: