தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்'திரைப்படத்திற்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு

டெல்லி: தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் திரைப்படத்திற்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிரதமரானது மற்றும் அவர் பிரதமரான காலகட்ட நிகழ்வுகளை தழுவி தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் என்ற பெயரில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் அனுபம் கேர் மன்மோகன் சிங் வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் மன்மோகன் சிங் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாகக் கூறி படத்திற்கு தடைவிதிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விவாரித்த உயர்நீதிமன்றம், தனிக்கை சான்றிதழ் கொடுக்கப்பட்ட ஒரு படத்திற்கு தடைவிதிக்க வாய்வில்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: