ஒரு தலைமுறையின் தலையில் இடி விழுந்திருக்கிறது: கவிஞர் வைரமுத்து கண்டனம்

சென்னை: ஆங்கிலம், இந்தியில் முகவரி எழுதினால் தான் அஞ்சல் சென்று சேருமா? என்று கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். அஞ்சல்துறை தேர்வுகள் ஆங்கிலம், இந்தியில் மட்டும் எழுத வேண்டும் என்பதற்கு கவிஞர் வைரமுத்து தனது கண்டனம் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அஞ்சல் துறையில் கணக்காளர் பதவிக்கு அடுத்த மாதம் 14-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமே கேள்விகள் இடம் பெறும் என தெரிவித்து இருந்தனர். தமிழ் மொழி மீண்டும் ஒருமுறை புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. இது, தற்போது மிகப்பெரிய சர்ச்சையாகி வருகிறது. குறிப்பாக மத்திய அரசு தேர்வுகளான ஜேஇஇ தேர்வில் கூட தமிழில் எழுத அனுமதி வழங்கியுள்ள நிலையில், அஞ்சல் துறை தேர்வுகளில் தமிழ் புறக்கணிக்கப்படுவதால் தேர்வர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.  முக்கியமாக இந்த அறிவிப்புக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதற்க்கு கவிஞர் வைரமுத்து தனது கண்டனம் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். ஆங்கிலத்திலும், இந்தியிலும் தான் தேர்வெழுத வேண்டுமா?; சினத்தோடு கண்டிக்கிறோம். மேலும் ஆங்கிலம், இந்தியில் முகவரி எழுதினால் தான் அஞ்சல் சென்று சேருமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அஞ்சல்துறை தேர்வுக்கு தமிழில் தயாராகிக் கொண்டிருந்த ஒரு தலைமுறையின் தலையில் இடி விழுந்திருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். …

The post ஒரு தலைமுறையின் தலையில் இடி விழுந்திருக்கிறது: கவிஞர் வைரமுத்து கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: