புயலில் பணியாற்றிய 26 ஆயிரம் மின்வாரிய ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்: அமைச்சர் தங்கமணி

சென்னை: அனைத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கையும் பரிசீலிக்கப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பொங்கல் முடிந்த பிறகு, கஜா புயலில் பணியாற்றிய 26 ஆயிரம் மின்வாரிய ஊழியர்களுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மூலம் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என கூறியுள்ளார். மேலும், புயல் பாதிப்பு பகுதிகளில் இன்னும் 3 நாட்களில் விவசாயத்திற்கு முழுமையாக மின்சாரம் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: