அரக்கோணம் அருகே கோயிலில் கடத்தப்பட்ட ரூ.6 கோடி மதிப்புள்ள பஞ்சலோக முருகன் சிலை மீட்பு

சென்னை: அரக்கோணம் நெமிலியில் கோயிலில் இருந்து கடத்தப்பட்ட பழமையான முருகன் சிலை மீட்கப்பட்டுள்ளது. சென்னை ஈக்காட்டுதாங்களில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முருகன் சிலையை மீட்டது. மீட்கப்பட்ட முருகன் சிலை ரூ.6 கோடி மதிப்புள்ளது என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சிலையை கடத்திய 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருகம்பாக்கம் இஸ்மாயில், குமரி முருகேஷ், சிவக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அரக்கோணம் நெமிலி பகுதியில் உள்ள முருகன் கோயிலில் தொன்மையான பஞ்சலோக சிலை காணாமல் போனதாக புகார் வந்தது. இந்த புகார் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு அதுதொடர்பாக போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் விருகம்பாக்கத்தை சேர்ந்த இஸ்மாயில் என்ற நபர் இந்த சிலை கடத்தலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதனை தொடர்ந்து விசாரணை செய்ததில் சென்னை ஈக்காட்டுதாங்களில் ஒரு வீட்டில் இந்த பஞ்சலோக சிலையானது மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மணிக்கவேல் தலைமையிலான குழு அந்த வீட்டிற்கு சென்று அந்த பஞ்சலோக சிலையை மீட்டுள்ளனர். சுமார் ரூ. 6 கோடி மதிப்புள்ள அந்த பஞ்சலோக சிலை மீட்கப்பட்டு கிண்டியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக இந்த வழக்கு தொடர்பாக  3 பேர் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிவகுமார் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் அவரது மகன் தொடர்பில்லாத காரணத்தினால் அவரை மட்டும் வழக்கில் இருந்து விடுவித்து சிவகுமார் என்பவரை கைது செய்திருக்கின்றனர். இதுமட்டுமில்லாமல் விருகம்பாக்கம் இஸ்மாயில், கன்னியாகுமாரியை சேர்ந்த முகேஷ் மற்றும் இதில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இவர்களை கைது செய்ய சிலை கடத்தல் சிறப்பு பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: