இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை: தேர்தல் வெற்றிக்குப் பிறகான செயல்திட்டங்களை விவாதிக்க திட்டம்!

டெல்லி: இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளனர். 18வது மக்களவை தேர்தல் ஏப்.19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டமாக நடக்கிறது. ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதுவரை 6 கட்ட தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன. 486 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. இந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது. மொத்தம் 28 எதிர்க்கட்சிகள் இணைந்து இந்த இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.

இந்நிலையில் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஜூன் 1-ம் தேதி இந்தியா கூட்டணியை சேர்ந்த அனைத்துக் கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் ஜூன் 1ம் தேதி (சனிக்கிழமை) டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு எதிர்க்கட்சிகளின் இந்தியா இந்தியா கூட்டணி அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாகும் நிலையில், அதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் முக்கிய ஆலோசனை நடத்தக உள்ளனர். இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டணியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யவும், விவாதிக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

The post இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை: தேர்தல் வெற்றிக்குப் பிறகான செயல்திட்டங்களை விவாதிக்க திட்டம்! appeared first on Dinakaran.

Related Stories: