சர்வதேச தேயிலை தினம்

மார்த்தாண்டம் : சர்வதேச தேயிலை தினம் ஒவ்வோராண்டும் டிசம்பர் 15ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. முதல்முறையாக 2005 டிசம்பர் 15ம் தேதி புதுடெல்லியில் இத்தினம் கொண்டாடப்பட்டது. தேயிலை தோட்ட தொழிலாளர்கள், தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் தேயிலையை பயன்படுத்துவோர் எதிர்நோக்கும் பிரச்னைகளை அரசாங்கத்துக்கும், மக்களுக்கும் கொண்டு செல்வதே இத்தினத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

தேநீர் உலகின் பல்வேறு நாடுகளில் விரும்பி அருந்தப்படம் பானமாக உள்ளது. உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக அருந்தப்படுவது தேநீர் என கூறுகின்றனர். தேயிலை செடியில் உள்ள தளிர் இலைகளில் இருந்து தேநீர் தயாரிக்கப்படுகிறது. சூடான நீரில் தேயிலை பொடி கலந்து தேனீராக அருந்துகின்றனர். சிலர் தேநீரை குளிர்வித்தும் அருந்துகின்றனர்.

தேயிலை வடகிழக்கு இந்தியா, வடக்கு பர்மா, தென்மேற்கு சீனா, திபெத் ஆகியவை அடங்கிய பகுதிகளில் ேதான்றியதாக கூறப்படுகிறது. இங்கிருந்து உலகின் 52 நாடுகளுக்கு தேயிலை அறிமுகமாமானது. சீனாவின் யுனான் மாகாணமே தேநீரின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. இங்குதான் முதன்முதலில் தேயிலையை நீரில் ஊறவைத்து குடிப்பது சுவையானது என மனிதன் அறிந்து கொண்டான்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: