மாதவராவ் உள்ளிட்ட 3 பேர் மீண்டும் ஜாமீன் கோரி மனு

சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 3 பேர் ஜாமீன் கோரி 3வது முறையாக மனுதாக்கல் செய்துள்ளனர். மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் குட்கா முறைகேடு தொடர்பாக குடோன் உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமா சங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செந்தில் முருகன், சிவகுமார் மற்றும் கலால் துறை அதிகாரி பாண்டியன் ஆகியோரை கைது செய்தனர்.

இதையடுத்து 6 பேரும் ஜாமீன் கோரி சென்னை, சிபிஐ நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிபதிகள், ஜாமீன் அளிக்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர். இந்நிலையில் வழக்கு தொடர்பாக கடந்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, நேற்று சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் மாதவராவ், சீனிவாச ராவ், உமா சங்கர் குப்தா ஆகியோர் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக சிபிஐ தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: