தமிழக ஹாக்கி அணிக்கு காரைக்குடி அழகப்பா மாதிரி பள்ளி மாணவர்கள் தேர்வு

காரைக்குடி: தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ள தமிழக அணிக்கான வீரர்கள் தேர்வு மதுரை மற்றும் கோவையில் நடந்தது. இதில், ஹரியான மாநிலத்தில் நடைபெறும் தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோர் மாணவர்கள் பிரிவில் விளையாட காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலை பள்ளி மாணவர் சங்கர், மாணவி சண்முகப்பிரியா ஆகியோர் தேர்வு பெற்றனர். இவர்கள் தமிழக அணிக்காக விளையாட உள்ளனர்.

அதேபோல் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடக்கவுள்ள 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் விளையாட இதே பள்ளி மாணவர் ஜான்வெஸ்ட்லி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், கடந்த 3 வருடங்களாக தொடர்ந்து தமிழக அணிக்காக தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் விளையாடி வருகிறார்.  தேர்வு பெற்ற மாணவர்களை அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் என்.ராஜேந்திரன், பதிவாளர் குருமல்லேஷ்பிரபு, பள்ளி தலைமையாசிரியர் ராஜபாண்டியன், உடற்கல்வி இயக்குநர் முத்துக்கண்ணன், மெய்யப்ப செட்டியார் பள்ளி தாளாளர் பழனியப்பன், ஒருங்கிணைந்த மாவட்ட ஹாக்கி கழக செயலாளர் தியாகபூமி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சூரன் ஆகியோர் பாராட்டினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: