யு.ஜி.சி. நெட் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு

சென்னை: பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் யு.ஜி.சி. நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி கட்டாயம். இந்த தேர்வை, தேசிய தேர்வுகள் முகமை ஆண்டுதோறும் 2 முறை கணினி வழியில் நடத்துகிறது.

நடப்பாண்டுக்கான யு.ஜிசி. நெட் தேர்வு, வருகிற 18ம் தேதி தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடக்கிறது. இத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் https://ugcnet.nta.ac.in என்ற தேசிய தேர்வுகள் முகமைஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள், விண்ணப்ப பதிவு எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். பதிவிறக்கம் செய்வதில் சிரமங்கள் இருந்தால், 011- 40759000 அல்லது ugcnet@nta.ac.in. என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.

The post யு.ஜி.சி. நெட் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: