தமிழகம் முழுவதும் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு பல்வேறு சிவாலயங்களில் அன்னாபிஷேகம்

ராமேஸ்வரம்: தமிழகம் முழுவதும் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு பல்வேறு சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள 108 சிவலிங்கம், பஞ்சலிங்கம், காசி விஸ்வநாதர் ஆகிய லிங்கங்களுக்கு 100 கிலோ அரிசியைக் கொண்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் அர்ஜுனிஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற அன்னாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். கோவில் பிரகாரத்தில் பெண்கள் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபட்டனர். தேனீ மாவட்டம் போடியில் மலை மீது அமைந்துள்ள பரமசிவன் திருக்கோவிலில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகமும், நந்திக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. பக்தர்கள் பஜனைப்பாட்டு பாடி சுவாமியை தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை வந்தவாசியில் உள்ள சிவாலயத்தில் அன்னாபிஷேகமும், பல்வேறு பலகாரங்களைக் கொண்டு சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: