புதிய டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் அறிமுகம்

பண்டிகை காலத்தையொட்டி, பல புதிய கார் மாடல்கள் தொடர்ந்து வரிசை கட்டி வருகின்றன. அந்த வகையில், புதிய மாற்றங்களுடன் டட்சன் கோ ஹேட்ச்பேக் காரும், கோ ப்ளஸ் 7 சீட்டர் எம்பிவி ரக காரும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த இரு கார்களிலும் புதிய 14 அங்குல டைமண்ட் கட் அலாய் சக்கரம் பொருத்தப்பட்டு இருக்கின்றன. புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், முழுமையான க்ளவ் பாக்ஸ் ஆகியவையும் இந்த மாடலின் முக்கிய அம்சங்கள் ஆகும். புதிய டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் பவர் விண்டோஸ், எலெக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், டூயல் ஏர்பேக்குகள் ரியர் விண்டோ வைப்பர் போன்ற வசதிகளும் உள்ளன. இரண்டு கார்களிலுமே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தக்கவைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 104 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும்.

வெளிநாடுகளில் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் இந்த கார்கள் கிடைக்கின்றன. ஆனால், இந்தியாவில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் சிறிது காலம் கழித்து அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் நிச்சயம் இந்த கார்களின் விற்பனைக்கு வலு சேர்க்கும் வாய்ப்புள்ளதால், அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு புதிய கார்களிலுமே ஆம்பர் ஆரஞ்ச் மற்றும் சன்ஸ்டோன் பிரவுன் என்ற இரண்டு புதிய வண்ணங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த வண்ணங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் என்று கருதலாம். புதிய டட்சன் கோ கார் ரூ.3.29 லட்சம் (டெல்லி எக்ஸ்ஷோரூம்) விலையிலும், டட்சன் கோ ப்ளஸ் கார் ரூ.3.83 லட்சம் (டெல்லி எக்ஸ்ஷோரூம்) விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: