கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றியது தமிழக அரசு

சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஓராண்டாக நடைபெற்றது. இதன் நிறைவு விழா சென்னையில் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் என அறிவித்தார். அதன்படி கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்துக்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்பட்டு, பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையத்திட்டம் 1996-2001 ஆட்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களால் தொடங்கப்பட்டது. கட்டடப் பணிகள் நிறைவுற்றப்போது ஆட்சி மாறியதால் ஜெயலலிதா முதலவராக பதவியில் இருந்தார். அதனால் கடந்த 2002 ஆம் ஆண்டு கோப்யம்பேடு பேருந்து நிலையத்தை அவர் திறந்து வைத்தார். இந்த பெயர் மாற்றம் அறிவித்தவுடனேயே திமுக தலைவர் மு க ஸ்டாலின் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். கலைஞர் ஆரம்பித்த பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆரின் பெயரை சூட்டுவது அடுத்தவர் குழந்தைக்கு தனது பெயரை சூட்டுவது போல் உள்ளது என விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: