குட்கா பதுக்கலில் தேனி போலீஸ்

தேனி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் தேனி அருகே வடபுதுப்பட்டியில் குட்கா புகையிலை பொருட்கள் சோதனையில் ஈடுபட்டனர். அந்த கட்டிடத்திற்குள் இருந்து ₹5 லட்சம் மதிப்புள்ள தடை  செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் கட்டிடம், பல வழக்குகள் உள்ள ‘ரத்தினமானவருக்கு’ சொந்தமானது என தெரிந்தது.போலீஸ் விசாரணையில் அந்த ரத்தினமானவரிடம் வேலை பார்க்கும் தொழிலாளி பால்ராஜ், ‘‘கடை உரிமையாளருக்கு தெரியாமல் நான்தான் குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கினேன்.’’ எனக்கூறவே போலீசார்,  பால்ராஜை பிடித்தனர்.

Advertising
Advertising

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், குட்கா விற்பனையில் தேனியில் கொடிகட்டி பறக்கும் ரத்தினமானவரின் உறவினரான தற்போது மோப்பநாய் படைப்பிரிவில் பணி மாறுதலாகியுள்ள  ‘உதயம்’ பெயர் கொண்டவர், இந்த கட்டிடத்தை வாடகைக்கு பிடித்துள்ள விபரம் கசிந்துள்ளது. குட்கா பிரச்னை தமிழகம் முழுவதும் பரபரப்பாக உள்ள நிலையில், துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சொந்த மாவட்டத்திலும் குட்கா பதுக்கலில் போலீஸ் தொடர்பு உள்ளது, ஆளுந்தரப்பினை கதிகலங்கச் செய்துள்ளது. இதில்  போலீஸ் முதலாளிக்காக பழியை ஏற்றுள்ள தொழிலாளியை தண்டித்து விட்டு, பிரச்னை ஊத்தி மூடப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: