டெல்லி தலைமை செயலாளர் தாக்கப்பட்ட வழக்கு : கெஜ்ரிவால் உள்ளிட்ட 13 பேருக்கு சம்மன்

புதுடெல்லி : டெல்லியில் தலைமை செயலாளர் தாக்கப்பட்ட வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் 11 எம்எல்ஏக்களுக்கு பாட்டியாலா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லியில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், முதல்வர் முன்னிலையில் டெல்லி அரசின் தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷை ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இருவர் தாக்கியதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக அன்ஷு பிரகாஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், கடந்த பிப்ரவரி 23ம் தேதி சிவில் லைன்ஸில் உள்ள முதல்வர் இல்லத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிவிடி கேமராக்களையும் ஆய்வு செய்து, அதன் ஹார்டு டிஸ்கை மீட்டு தடய அறிவியல் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அமானத்துல்லா கான், பிரகாஷ் ஜர்வால் ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். மேலும் இதுகுறித்து முதல்வர் கெஜ்ரிவாலிடம் காவல்துறையினர் மூன்று மணி நேரமாக விசாரணை நடத்தினர். பின்னர் முதல்வர் கெஜ்ரிவாலின் தனிச் செயலராக இருந்த வி.கே. ஜெயின், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் கூட்டத்தில் பங்கேற்ற 11 எம்எல்ஏக்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இது தொடர்பான வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக காவல்துறையினர் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதனையடுத்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் 11 எம்எல்ஏக்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதில் சம்மந்தப்பட்ட அனைவரும் வரும் அக்டோபர் 25ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: