தூத்துக்குடி துப்பபாக்கிச்சூடு குறித்து நேரில் சென்று விசாரிக்க முடியுமா? தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு நோட்டீஸ்

டெல்லி:  தூத்துக்குடி கலவரம் தொடர்பாக நேரில் சென்று விசாரிக்க முடியுமா என தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு, டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கறிஞர் சபரி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் மேற்கண்ட கேள்வியை எழுப்பியுள்ளது. இதற்கான பதிலை வரும் 29-ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தமிழக காவல்துறையின் இந்த கொடூர செயலுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இந்த சம்பம் குறித்து விளக்கமளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் இது பயனற்றது என கூறி ராஜராஜன் என்பவர் வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மிகவும் கவலையளிக்கக்கூடிய, மனித உரிமைகள் மீறப்பட்ட தீவிரமான இந்த விஷயத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரடியாகத் தலையிடாமல், தமிழக அரசிடமும், போலீஸ் டிஜிபியிடமும் மட்டும் அறிக்கை கேட்டுள்ளதாக புகார் தெரிவித்தார். இவ்விகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக தலையிடாவிட்டால், சட்டவிரோத நடவடிக்கைகள் தொடரும். போலீஸார் மக்களைச் சுடும் சம்பவங்கள் தொடரும் அபாயமும் இருப்பதாக கூறினார். படுகொலையை நிகழ்த்தியவர்களிடமே அறிக்கை கேட்டால் அறிக்கை அவர்களுக்கு சாதகமாகவே தயாரித்து வழங்கப்படும். எனவே தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரடியாக களத்தில் இறங்கி, துப்பாக்கிச்சூடு நடந்த இடங்களைக் ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் மனுதாரரின் கோரிக்கையை ஏற்று தூத்துக்குடிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த முடியுமா என பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: