படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா கோலாகலம்

கோத்தகிரி: நீலகிரியில் வாழும் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா கடந்த திங்கட்கிழமை தொடங்கி 8 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நாளான நேற்று பேரகனியில் உள்ள ஹெத்தையம்மன் கோயிலில் திருவிழா கொண்டாடப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் படுகர் இன மக்கள் மற்றும் சமவெளிப் பகுதிகளில் வாழும் படுகர் இன மக்கள் வேண்டுதல்கள் நிறைவேற தடி எடுத்து, காணிக்கை செலுத்தி வழிபட்டனர். இதையொட்டி நேற்று தமிழக அரசு  உள்ளூர் அரசு விடுமுறை அளித்தது. திருவிழாவிற்கு அதிக மக்கள் வருவதையொட்டி கோத்தகிரி பகுதியில் இருந்து பேரகனிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன….

The post படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா கோலாகலம் appeared first on Dinakaran.

Related Stories: