ஒரே பிரசவத்தில் 4 ஆண் உட்பட 9 குழந்தைகளை பெற்றெடுத்த மாலி பெண்: உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்..!!

ஒரே பிரசவத்தில் 5 பெண், 4 ஆண் என 9 குழந்தைகளை பெற்றெடுத்த மாலி பெண் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் மொராக்கோ மருத்துவமனையில் ஹலிமா சிஸ்ஸே என்ற அவருக்கு பிறந்த 9 குழந்தைகளும் நலமாக உள்ளதையடுத்து கின்னஸ் இதனை அறிவித்துள்ளது. மாலிவை சேர்ந்த அவருக்கு மருத்துவ சோதனையில் 7 குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மொராக்கோவுக்கு அனுப்பப்பட்ட அவருக்கு 9 குழந்தைகள் பிறந்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 19 மாதங்களுக்கு பிறகு குழந்தைகளுடன் பெற்றோர் தாயகம் திரும்பினர். இதுவரை அமெரிக்க பெண் ஒருவர் 8 குழந்தைகள் பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது.

The post ஒரே பிரசவத்தில் 4 ஆண் உட்பட 9 குழந்தைகளை பெற்றெடுத்த மாலி பெண்: உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்..!! appeared first on Dinakaran.

Related Stories: