அமெரிக்க பூங்காவில் முதன்முறையாக சிசேரியன் மூலம் பிறந்த கொரில்லா குட்டி..!!

கருவுற்றிருக்கும் பெண்களுக்கு அசாதாரண சூழலில் சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதைப்போலவே அறுவை சிகிச்சை மூலம் பிறந்த கொரில்லா குட்டி ஒன்று தாயின் அரவணைப்புக்காக ஏங்கி தவிக்கிறது. மனித மூதாதையர் இனத்துக்கு நெருக்கமான கொரில்லாக்களுக்கும் நமக்கு ஏற்படுவதை போல நோய்கள் தாக்கப்படுவதுண்டு. அப்படிதான் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள விலங்கியல் பூங்காவில் உள்ள 33 வயதான செகானே என்ற கொரில்லாவுக்கும் நோய் பாதிப்பு ஏற்பட்டது. கர்ப்பிணியான செகானே, பேரு காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் அதீத ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொரில்லாவுக்கான 40 வார கர்ப்ப காலத்துக்கு 5 வாரங்களுக்கு முன்னதாகவே செகானேவுக்கு அறுவை சிகிச்சை செய்து குட்டியை வெளியே எடுத்தனர். மூச்சுப்பிரச்சனை இருந்ததால் இன்குபேட்டரில் வைத்து செயற்கை சுவாசம் கொடுத்தனர். கொரில்லா குட்டிக்கு ஜமீலா என பெயர் சூட்டிய மருத்துவர்கள் தாயிடம் சேர்த்தனர். ஆனால் என்ன காரணமோ செகனே அதனை ஏற்கவில்லை. 115 ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக சிசேரியன் மூலம் பூங்காவில் கொரில்லா குட்டி பிறந்த நிலையில் அது வாழ்வதற்காக கனத்த இதயத்துடன் குட்டியை இடமாற்றம் செய்திருக்கிறது பூங்கா நிர்வாகம்.

The post அமெரிக்க பூங்காவில் முதன்முறையாக சிசேரியன் மூலம் பிறந்த கொரில்லா குட்டி..!! appeared first on Dinakaran.

Related Stories: