ரன்வீர் சிங் ஜோடியாகும் கல்யாணி

 

மும்பை: இந்தியில் ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்த ‘துரந்தர்’ என்ற பிரமாண்டமான அதிரடி ஆக்‌ஷன் படத்தின் இரண்டு பாகங்களும் சூப்பர் ஹிட்டாகியுள்ள நிலையில், வசூலிலும் மாபெரும் சாதனையை படைத்துள்ளன. இப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த ரன்வீர் சிங், அடுத்து ஹன்சல் மேத்தா இயக்கும் ‘பிரலே’ என்ற ஜோம்பி திரில்லர் படத்தில் நடிக்கிறார். ரன்வீர் சிங் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் இப்படம், இந்தியாவில் இதற்கு முன்பு முயற்சிக்கப்படாத ஒரு மாறுபட்ட கதையும், காட்சிகளும் கொண்ட படம் என்று கூறப்படுகிறது. இதை 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ரன்வீர் சிங் தயாரிக்கிறார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ‘நான் தயாரிக்கும் ‘பிரலே’ என்பது ஒரு அசல் படம். போர்ச்சுக்கீசிய மொழியில் வெளியான ‘பிளைண்ட்னஸ்’ என்ற நாவலை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகிறது என்பதாக வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை. பேரழிவுகளால் சிதைக்கப்பட்ட அவலநிலை நகரத்தை உருவாக்கும் ஜோம்பி திரில்லர் கதையில் படம் உருவாகிறது என்பதே உண்மை’ என்று தெரிவித்துள்ளார்.

 

Related Stories: