ஹபீபி படத்துக்கு மாளவிகா மனோஜ் தேர்வானது எப்படி? மீரா கதிரவன்

 

சென்னை: தமிழில் வெளியான ‘ஜோ’, ‘ஆண் பாவம் பொல்லாதது’ ஆகிய படங்களின் மூலமாக ரசிகர்களின் மனதை கவர்ந்த மலையாள நடிகை மாளவிகா மனோஜ், தற்போது மீரா கதிரவன் எழுதி இயக்கிaயுள்ள ‘ஹபீபி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதுகுறித்து மீரா கதிரவன் கூறியதாவது: நிலோஃபர் நிஷா என்ற கேரக்டரில் மாளவிகா மனோஜ் நடித்துள்ளார். அனைவரும் அவரை, ‘நிலா பொண்ணு’ என்று செல்லப்பெயரில் கூப்பிடுவார்கள்.

கடந்த 1990களில் வாழ்ந்த ஒரு பெண்ணை, இரண்டு காலக்கட்டங்களில் மாறுபட்ட தோற்றங்களுடன் நம்பகமாக வெளிப்படுத்தக்கூடிய ஒருவரை தேடினேன். அதற்காக 250க்கும் மேற்பட்ட நடிகைகளை ஆடிஷன் செய்தேன். பிறகு மாளவிகா மனோஜை தேர்வு செய்தேன். முக்கிய கேரக்டரில் கஸ்தூரிராஜா நடிக்கிறார். ‘என் அன்புக்குரியவளே’ என்ற படத்தலைப்பின் பொருளுக்கு ஏற்ப காதல், மனித உறவுகள், வாழ்வியல் அனுபவங்களை பேசுகிறது. ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடுகிறார். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார்.

 

Related Stories: