லண்டன் ஒலிம்பிக்ஸில் தேசிய கொடியை ஏந்தி வந்த வீராங்கனை… டீ எஸ்டேட்டில் ரூ.167க்கு கூலி வேலை பார்க்கும் அவலம்

டிஸ்பூர் : டோக்கியோவில் இருந்து வெற்றி பதக்கங்களுடன் திரும்பியவர்களை இந்தியா கொண்டாடி வரும் அதே வேளையில், ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீராங்கனை ஒருவர் தனது குடும்பத்தை பாதுகாக்க டீ எஸ்டேட்டில் கூலி வேலை பார்க்கும் அவலமும் இருக்க தான் செய்கிறது. அசாம் மாநிலம் திப்ருகரைச் சேர்ந்த பிங்கி கர்மாக்கர் தான் அந்த வீராங்கனை ஆவார். இவர் 2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் கொடியை ஏந்தி வலம் வந்த பெருமைக்குரியவர். அப்போது அவருக்கு 17 வயது, தான் படித்த பள்ளியில் யுனிசெப்பின் விளையாட்டு மேம்பாட்டு திட்ட பொறுப்பாளராக பிங்கி பணியாற்றினார்.அவரது திறமையை அங்கீகரிக்கும் விதமாக ஒலிம்பிக்கில் இந்திய தேசிய கொடியை ஏந்தும் வாய்ப்பு அப்போது அவருக்கு வழங்கப்பட்டது. இதனால் அசாம் மாநிலமே கவுரவம் அடைந்தது. லண்டனில் இருந்து பிங்கி சொந்த ஊர் திரும்பிய போது, பிரம்மாண்ட வரவேற்பும் அளிக்கப்பட்டது. ஆனால் அரசும் விளையாட்டு அமைப்புகளும் உறுதி அளித்தவாறு, அதன் பிறகு எதையும் செய்து தரவில்லை என்பது பிங்கியின் குமுறலாக இருக்கிறது. தற்போது குடும்பத்தை பாதுகாக்க டீ எஸ்டேட்டில் தினக்கூலியாக நாள் ஒன்றுக்கு ரூ.167 வருமானம் ஈட்டி வருவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.ஒலிம்பிக்கில் இந்திய தேசிய கொடியை ஏந்தி செல்லும் அறிய வாய்ப்புக்கு தேர்வு செய்யப்பட்ட போது, பல்வேறு உறுதிகளை அதிகாரிகள் அளித்தனர்.மாத ஊதியம் கிடைக்கும் எனவும் கூறினர். ஆனால் இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று பிங்கி வருத்தம் தெரிவித்துள்ளார். கூலி தொழிலாளியின் மகள் கூலியாக இருப்பது மட்டுமே உண்மை என்றும் அவர் தனது வேதனையை கொட்டியுள்ளார்….

The post லண்டன் ஒலிம்பிக்ஸில் தேசிய கொடியை ஏந்தி வந்த வீராங்கனை… டீ எஸ்டேட்டில் ரூ.167க்கு கூலி வேலை பார்க்கும் அவலம் appeared first on Dinakaran.

Related Stories: