சிக்ஸ்பேக்கிற்கே சவால் விடும் அர்ஜூன்

தற்போது 63 வயதாகும் ‘ஆக்‌ஷன் கிங்’ அர்ஜூன், அஜித் குமாருக்கு வில்லனாக ‘மங்காத்தா’, விஜய்க்கு வில்லனாக ‘லியோ’ உள்பட சில படங்களில் நடித்தார். தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் அவர் கூறுகையில், ‘நான் நினைத்தால், வெறும் 10 நாட்களில் என்னால் சிக்ஸ்பேக்கிற்கு மாற முடியும். அது பெரிய விஷயமே இல்லை’ என்று வியக்க வைத்த அவர், தனது 15 வயதில் இருந்தே கராத்தே போன்ற தற்காப்புக்கலைகளில் தேர்ச்சி பெற்றார்.

தனது மிகப்பெரிய பலமே தன்னை ‘ஃபிட்’டாக வைத்திருப்பதுதான் என்று ெசால்லும் அவர், தனது பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்காக இருப்பதால் பில்டிங்கும் ஸ்ட்ராங்காக இருக்கிறது என்றார். இன்றைய தலைமுறையினர் ஷார்ட்கட் மூலம் தங்களது உடலை பராமரிக்கலாம் என்றும், சிறுவயதில் இருந்தே தனது உடலுக்கு அசாத்தியமான உழைப்பை கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: