தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிக்கும் பாக்கெட் நாவல்

சென்னை: தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நடிக்கும் படத்துக்கு `பாக்கெட் நாவல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. `ஆரண்ய காண்டம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தியாகராஜன் குமாரராஜா, முதல் படத்திலேயே வித்தியாசமான இயக்குனர் என்பதை நிரூபித்து பலத்த பாராட்டுகளை பெற்றார். அடுத்து அவர் இயக்கிய ‘சூப்பர் டீலக்ஸ்’ என்ற படமும், ‘மாடர்ன் லவ் சென்னை’ என்ற ஆந்தாலஜி தொடரில் இடம்பெற்ற `நினைவோ ஒரு பறவை’ என்ற எபிசோடும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது. பாக்கெட் நாவல் படத்தில் மாளவிகா மோகனன், ராஜ் பி.ஷெட்டி, ‘ஆடுகளம்’ கிஷோர் நடிக்கின்றனர். இளையராஜா இசை அமைக்கிறார். ஆண்ட்ரூ லூயிஸ் கதை, திரைக்கதை எழுதியுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, தியாகராஜன் குமாரராஜா தயாரிக்கிறார். தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Related Stories: