ரசிகர்களுக்கு தனுஷ் இன்ப அதிர்ச்சி

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தனது ரசிகர்களை சந்தித்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார், தனுஷ். தனது 54வது படமாக விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்த ‘கர’ படத்துக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில், அடுத்து ‘அமரன்’ ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கிறார். இது அவரது 55வது படமாகும். சாய் அபயங்கர் இசை அமைக்கிறார். மம்மூட்டி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீலீலா, சாய் பல்லவி நடிக்கின்றனர். சென்னை மற்றும் திருப்பதியில் படப்பிடிப்பு நடக்கிறது.

முன்னதாக கடந்த ஞாயிறு அன்று அடையாறு பெண்கள் கல்லூரியில் ரசிகர்களை சந்தித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்த தனுஷ், குடும்பத்துடன் வந்த ரசிகர்களுடன் சேர்த்து, சுமார் 3 ஆயிரம் பேருடன் போட்டோ எடுத்து அசத்தியிருக்கிறார். கோவை, சேலம், கோவை தெற்கு, கரூர் ஆகிய பகுதிகளில் இருந்து ரசிகர்கள் வந்திருந்தனர். பெண்களுக்கு புடவை, குழந்தைகளுக்கு ஸ்கூல்பேக் ஆகியவற்றை வழங்கிய தனுஷ், வரும் ஞாயிறு அன்று கோவை, திருப்பூர், ஈரோடு, ஓசூர் பகுதியிலுள்ள ரசிகர்களை சென்னையில் சந்திக்கிறார். தனுஷின் இச்செயல், அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.

Related Stories: