‘மரகத நாணயம் 2’ல் பிரியா பவானி

‘மரகத நாணயம் 2’ என்ற படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. கார்த்தி ‘கிளாப்’ அடிக்க, வெங்கட் பிரபு ‘ஆக்‌ஷன்’ சொல்லி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கி, கடந்த 2017ல் திரைக்கு வந்து வெற்றிபெற்ற படம், `மரகத நாணயம்’. இது பேண்டஸி காமெடி படமாக உருவாகி இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு `மரகத நாணயம் 2’ படத்துக்கான அறிவிப்பு வெளியானது. இதில் ஆதி, நிக்கி கல்ராணி, பிரியா பவானி சங்கர், சத்யராஜ், முனீஷ்காந்த், ஆனந்தராஜ், டேனி, அருண்ராஜா காமராஜ், முருகானந்தம் நடிக்கின்றனர்.

முதல் பாகத்தில் பணியாற்றிய இசை அமைப்பாளர் திபு நைனன் தாமஸ், ஒளிப்பதிவாளர் பி.வி.சங்கர், எடிட்டர் ஆர்.திருமலை ராஜன், கலை இயக்குனர் என்.கே.ராகுல் ஆகியோர், தற்போது 2ம் பாகத்திலும் பணியாற்றுகின்றனர். முதல் பாகத்தை தயாரித்த ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி டில்லி பாபு மறைந்து விட்டாலும், இந்நிறுவனம் சார்பில் தேவ், கே.வி.துரை, `குட் ஷோ’ மனீஷ் சிங்கால், `டங்கல் டிவி’ துர்கா ராம் சவுத்ரி, ஆர்.டி.சி மீடியா, பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

Related Stories: