சென்னை: இந்திய திரையுலகின் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவரான இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு, ‘இளையராஜா’ என்ற பெயரில் உருவாக்கப்படும் என்று, கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிப்பார் என்றும், ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் தனுஷை இயக்கியிருந்த அருண் மாதேஸ்வரன் இப்படத்தை எழுதி இயக்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. திடீரென்று இப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து தனுஷ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு பதிவில், ‘இளையராஜா பயோபிக்கை அருண் மாதேஸ்வரன் இயக்க மாட்டார் என்று சமூக வலைத்தளங்களில் உலா வரும் தகவல்கள் உண்மை இல்லை. லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டிசி’ படத்தின் ரிலீசை தொடர்ந்து, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இளையராஜா பயோபிக் உருவாகும். அதை அருண் மாதேஸ்வரன் இயக்குவார். இப்படத்தை பற்றிய அப்டேட்டுகள் விரைவில் வெளியிடப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.
