ஐதராபாத்: கல்லூரி விழாவுக்கு கவர்ச்சி உடையில் மீனாட்சி சவுத்ரி வந்ததால் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ‘கோட்’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்தார் மீனாட்சி சவுத்ரி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். இரு தினங்களுக்கு முன் ஐதராபாத்திலுள்ள கல்லூரி விழா ஒன்றுக்கு மீனாட்சி ெசன்றிருந்தார். அப்போது உடலை நூலால் சுற்றியதுபோன்ற ஒரு மேலாடையை அவர் அணிந்திருந்தார். அவரது இடுப்ப பகுதி தெரியும்படியும் அந்த உடை இருந்தது. இதனால் மாணவ, மாணவிகள் முகம் சுழித்தனர். இதே உடையில் மேடைக்கு வந்து அவர் பேசினார். இந்த வீடியோ வைரலாகி, நெட்டிசன்கள் பலரும் அவரது உடையை விமர்சித்து கடுமையாக தாக்கி வருகிறார்கள்.
கல்வி போதிக்கும் இடத்தில் சினிமா நடிகர், நடிகைகளை வரவழைத்தாலும் அதற்காக ஒரு உடை நாகரீகம் இருக்கிறதல்லவா? அதை மீனாட்சி சவுத்ரி கடைப்பிடித்திருக்கலாம் என்றும் இதுபோன்ற ஆடையில் அவர் வந்திருப்பதை அனுமதித்து இருக்கக் கூடாது என்று சிலரும் கருத்துகளை தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விழாவுக்கு வருவதற்கு ஒரு நாள் முன்பு, திருப்பதி கோயிலுக்கு மீனாட்சி சவுத்ரி சென்றிருக்கிறார். அங்கு முழுக்க உடலை மறைத்து ஹோம்லி லுக்கில் சென்று, தலையில் காலணிகளையும் வைத்தபடி சென்றிருக்கிறார். ஒரே நாளில் இப்படி மாறிவிட்டாரே என்றும் அவரை ரசிகர்கள் பலரும் கடிந்து வருகிறார்கள்.
