ஹீரோவுக்கு நெருங்கிய தோழியான தனுஷா

மீரா விஜய் ஆண்டனி வழங்க, விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள படம், ‘பூக்கி’. கணேஷ் சந்திரா இயக்கியுள்ள ரொமான்ஸ் காமெடி படமான இது, வரும் 13ம் தேதி திரைக்கு வருகிறது.

இதுகுறித்து ஹீரோ அஜய் திஷான் கூறுகையில், ‘இதில் நடித்தது என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம். நான் கனவிலும் நினைக்காத பல விஷயங்கள் இதன்மூலம் நடந்தது. நிஜ அனுபவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இக்கதை என் மனதை பெரிதும் பாதித்தது. இயக்குனர் கணேஷ் சந்திராவுக்கு நன்றி. ஹீரோயின் தனுஷா நல்ல தோழியாக மாறிவிட்டார்’ என்றார். லட்சுமி மன்ச்சு கூறும்போது, ‘இதில் நடித்த அனுபவத்தை வெறும் வார்த்தைகளால் விளக்க முடியாது. இயக்குனர் மிகப்பெரிய திறமைசாலி. நடிகர்களை எப்படி கையாள வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கிறார். விஜய் ஆண்டனி இசை அமைத்த பாடல் காட்சியில் நான் நடிக்கவில்லை என்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது. இப்படத்தில் நானும் இருப்பதை பெருமையாக நினைக்கிறேன். தமிழில் தொடர்ந்து எனக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கிறது’ என்றார்.

ஹீரோயின் தனுஷா கூறுகையில், ‘ஒரு நடிகைக்கு மிகவும் முக்கியமானது சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் நடிப்பதுதான். அந்த நிம்மதியை எனக்கு அளித்த டைரக்டர் கணேஷ் சந்திராவுக்கு நன்றி’ என்றார். பிரியங்கா மஸ்தானி கூறும்போது, ‘நான் சேலத்தை சேர்ந்த கிராமத்து பெண். ஷூட்டிங் ஸ்பாட்டில் பொழுதுபோக வேண்டும் என்று, ஊரில் இருந்து முறுக்கு, அதிரசம் சுட்டு எடுத்து வந்தேன். ஆனால், டைரக்டருக்கு தெரியாமல் நான் மட்டுமே அனைத்தையும் ரகசியமாக சாப்பிட்டேன்’ என்றார்.

Related Stories: