துபாய்: கார் பந்தயத்தை காண வந்த ரசிகர்கள் கூச்சலிட்டு, ஆர்ப்பரித்ததால் அவர்களை அஜித்குமார் கடிந்துகொண்டார். துபாயில் நடக்கும் கார் ரேஸில் அஜித் குமார் பங்கேற்று வருகிறார். அவரை பார்க்கவும் கார் ரேஸில் அவர் பங்கேற்பதை காணவும் ஏராளமான ரசிகர்கள் துபாய் ஸ்டேடியத்துக்கு சென்று வருகிறார்கள். அங்கு அஜித்தை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். சில ரசிகர்கள் அத்துமீறி நடந்துகொள்ளும் செயலும் அவ்வப்போது நடக்கிறது. அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அஜித், கார் பந்தய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அஜித்தை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் கூச்சலிட்டு ஆர்ப்பரித்தனர். அங்கிருந்த பலரும் இதைக்கண்டு முகம் சுழித்தனர். உடனே கோபம் அடைந்த அஜித், இது ஒண்ணும் தியேட்டர் கிடையாது. ஒழுங்கா நடந்துகொள்ளுங்க என கறாராக சொன்னார். இதைக் கேட்டு ரசிகர்கள் கப்சிப் ஆகினர். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
