விளையாட்டு துறையில் புது முயற்சி ஸ்போர்ட்ஸ் திரைப்பட விழா

 

சென்னை: இந்தியாவின் முதல் ஸ்போர்ட்ஸ் திரைப்பட விழா சென்னையில் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை, போராட்டம் மற்றும் சாதனைகளை திரை மொழியில் சொல்லும் நோக்குடன் நடத்தப்பட்ட இந்த திரைப்பட விழா இந்த ஆண்டும் கோலாகலமாக நடைபெற உள்ளது. விளையாட்டையும் சினிமாவையும் ஒரே மேடையில் இணைத்த முதல் முயற்சியாக இந்த திரைப்பட விழா கவனம் பெற்றது.
இதனால் இதற்கு ஆதரவு பெருகியுள்ளது. விளையாட்டை சமூகத்துடனும் கலாச்சாரத்துடனும் இணைக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் Rise Up Championship Sports and Life Foundation (ஆர்யூசி), இந்த அமைப்பின் நிறுவனர் மற்றும் இயக்குனர் செல்வகுமார் பாலு தலைமையில் செயல்படுகிறது.

தற்போது 30வது டிகேஏ தமிழ்நாடு மாநில அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் 2026 நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு கராத்தே அசோசியேஷன் (டிகேஏ) நடத்தும் இந்த மாநில அளவிலான கராத்தே போட்டி, பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னை ஒய்எம்சிஏ, நந்தனம் வளாகத்தில் நடைபெற்றது. திரைப்படங்கள் மட்டுமின்றி, இசையையும் விளையாட்டுடன் இணைக்கும் முயற்சிகள் தொடரும் என ஆர்யூசி தெரிவித்துள்ளது.

Related Stories: