இருண்ட உலகில் சன்னி லியோன்

இந்தியில் அனுராக் காஷ்யப் எழுதி இயக்கியுள்ள திரில்லர் படம், ‘கென்னடி’. சர்வதேச திரைப்பட விழாக்களில் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை குவித்த இப்படம், வரும் 20ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. முன்னாள் போலீசான கென்னடி உதய் ஷெட்டி (ராகுல் பட்), ஒப்பந்த கொலையாளியாகி இரட்டை வாழ்க்கையை தொடர்வது குறித்து படம் பேசுகிறது. பகலில் டாக்ஸி டிரைவராகவும், மறைவில் ஊழல் போலீஸ் கமிஷனர் ரஷீத் கானுக்காக கொலை ஒப்பந்தங்களை நிறைவேற்றுபவராகவும் வாழும் அவர், தனது மகன் இழப்பினால் ஏற்பட்ட வலி மற்றும் சிதைந்து போன தனது குடும்பத்தின் நினைவுகளால் துரத்தப்படுகிறார்.

கடந்த காலத்தில் இருந்து தப்பிக்க முடியாத நகரில், தன்னையே தேடும் அவரது பயணம்தான் இப்படத்தின் கரு. ராகுல் பட், சன்னி லியோன், மோஹித் தகல்கர், மேகா பர்மன், அமீர் தல்வி, அபிலாஷ் தாப்லியால், கரிஷ்மா மோடி நடித்துள்ளனர். சன்னி லியோன் கூறுகையில், ‘இப்படம் ஒரு நடிகையாக, என்னை முற்றிலும் வேறொரு உணர்ச்சி உலகிற்குள் தள்ளியது. சார்லி மர்மமும், நுட்பமும், வலிமையும் ஒருசேர கொண்டவள். அவளது பயணத்தை ஆராய்வது சவாலானதும், நிறைவை தருவதுமான ஒரு அனுபவம்.

அனுராக் காஷ்யப்புடன் இணைந்து பணியாற்றியது, உரையாடலை விட மவுனத்தை கொண்டாட கற்றுக்கொடுத்தது. இதுவரை அனுபவிக்காத விதங்களில் இப்படம் எனக்கு மிகப்பெரிய சவால்களை ஏற்படுத்தி கொடுத்தது. ரசிகர்கள் மும்பையின் இருண்ட, அழகான ஒரு உலகத்தை அனுபவிப்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்றார்.

Related Stories: