கட்டிப்பிடிக்க முடியாததால் கஷ்டப்படும் சூர்யா

கடந்த 2002ல் அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா, லைலா, நந்தா நடிப்பில் வெளியான படம், ‘மௌனம் பேசியதே’. வரும் 13ம் தேதி ரீ-ரிலீசாகிறது. இதில் அமீர் இயக்குனராக அறிமுகமாக, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்தார். இப்படம் குறித்து நேற்று சூர்யா வெளியிட்ட வீடியோவில், ‘ஒழுங்காதானடா இருந்தீங்க. திடீர்னு எங்க இருந்துடா வருது இந்த லவ்வு? காதலுங்கிறது இங்க இருந்து வரக்கூடாது, இங்க இருந்து வரணும். தனி மரம் தோப்பெல்லாம் ஆகாது. இந்த மாதிரி பல டயலாக்ஸ வாட்ஸப் ஸ்டேட்டஸ், ரீல்ஸ் மற்றும் ஷார்ட்ஸா பார்த்துட்டு இருக்கேன்.

20 வருஷத்துக்கு முன்னாடி வந்த ‘மௌனம் பேசியதே’ படத்தை இப்பவும் பலபேர் ஃபேவரைட் படமா சொல்லிட்டு இருக்காங்க. இயக்குனர் அமீருக்கு இது முதல் படம். எனது சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. திரிஷா, லைலா, நேஹா என்று 3 ஹீரோயின்ஸ் இருந்தாலும், கட்டிப்புடிக்கிறதுனு எதுவும் இல்லாம ஒரு லவ் ஸ்டோரி. யுவன் சங்கர் ராஜாவோட ஆல்பம் ஹிட்ஸ் சாங்ஸ்ல, இதுவும் என்னுடைய மோஸ்ட் ஃபேவரைட் படம். ஒரு தலைமுறையே இந்த படத்தை பார்த்திருக்க வாய்ப்பில்ல. இந்த படம் வரும் 13ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகுது. ஒரு ஷோ உங்களோட சேர்ந்து பார்க்க ஆசப்படுறேன்’ என்று பேசியுள்ளார்.

Related Stories: