சிம்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி நடிக்கும் ‘அரசன்’ என்ற படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, கடந்த டிசம்பர் மாதம் கோவில்பட்டியில் நடந்தது. தற்போது சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதையொட்டி படப்பிடிப்பில் சிம்பு, வெற்றிமாறன் இருக்கும் போட்டோ ஒன்று வெளியிடப்பட்டது. தொடர்ந்து இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு புதிய போட்டோ ஒன்றை வெளியிட்டார். சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் பேசிய வெற்றிமாறன், ‘எனது இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’ படத்துக்கு முன்பு எழுதப்பட்ட கதை, `அரசன்’.

எப்போதுமே ஒரு படத்தை உருவாக்க நான் எடுத்துக்கொள்ளும் அதிக நேரத்தை இந்த படத்துக்கு எடுத்துக்கொள்ள மாட்டேன். இதன் படப்பிடிப்பு விரைவில் முடிந்துவிடும். இன்னும் சில நாட்களில், இந்த படம் சம்பந்தமான முக்கிய காட்சி ஒன்றை வெளியிடுகிறோம். அதில் நாங்கள் செய்யும் வேலை என்ன என்று சிம்புவின் ரசிகர்களுக்கு புரியும்’ என்றார். இதில் ஹீரோயினாக நடிக்க பிரியங்கா மோகனிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

தவிர ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வருகின்றனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க, வெற்றிமாறன் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட ‘வாடிவாசல்’ என்ற படத்தை பற்றிய அப்டேட் எதுவும் வெளியாகாத நிலையில், சூர்யாவின் ரசிகர்கள் அப்செட்டில் இருக்கின்றனர்.

Related Stories: