கருப்பு பல்சர்: விமர்சனம்

சென்னையில் வாட்டர் பியூரிஃபையர் கம்பெனி நடத்தும் ‘அட்டகத்தி’ தினேஷ். அப்போது தன்னிடம் இருந்த பழைய கருப்பு பல்சர் வண்டியை யார் தலையிலாவது கட்டிவிட வேண்டும் என்று நினைக்கும் இன்னொரு வாட்டர் பியூரிஃபையர் கம்பெனி நடத்தும் மன்சூர் அலிகான், அதை தினேஷுக்கு விற்கிறார். அந்த வண்டியை ஓட்டிய தினேஷ் வாழ்க்கையில் பல்வேறு அமானுஷ்ய சம்பவங்கள் நடந்து மிரட்டுகிறது. அது என்ன என்பது மீதி கதை. ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர், தங்கை மீது பாசத்தை பொழியும் அண்ணன் என்று, தினேஷுக்கு இரட்டை வேடங்கள். ஆனால், ஒரே பாடிலாங்குவேஜை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அவரது யதார்த்தமான நடிப்பு மட்டுமே பிளஸ் பாயின்ட். சென்னை தினேஷுக்கு ரேஷ்மா வெங்கட், வீரர் தினேஷுக்கு மதுனிகா ஜோடி. இரு ஹீரோயின்களும் கேரக்டருக்கேற்ப நடித்துள்ளனர். படம் முழுக்க சாப்பிட்டுக்கொண்டே இருக்கும் மன்சூர் அலிகான், போலீஸ் அதிகாரி சரவண சுப்பையா உள்பட அனைவரும் இயக்குனர் சொன்னதை செய்துள்ளனர். பிராங்க்ஸ்டர் ராகுல், சிரிக்க வைக்க பகீரத பிரயத்தனம் செய்துள்ளார். பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவு இயல்பாக இருக்கிறது. இன்பா இசையில் பாடல்கள் ஒட்டவில்லை, பின்னணி இசை ரசிக்கலாம். இயக்குனர் முரளி கிரிஷ்.எஸ், வழக்கமான பேய் படங்களில் இருந்து மாறுபட்ட பேய் கதை தர முயன்றுள்ளார்.

Related Stories: