தடையை மீறி அண்ணாமலையார் மலைக்கு சென்ற நடிகை” ரூ.25 ஆயிரம் அபராதம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் 2,668 அடி உயர தீபமலையை சுற்றி 14 கி.மீ. கிரிவலம் செல்கின்றனர். குறிப்பாக பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். ஆனால் இறைவனின் திருமேனியாக வணங்கப்படும் தீபமலை மீது ஏற வனத்துறை தடை விதித்துள்ளது.

இந்நிலையில் தடையை மீறி நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன் என்பவர் மலை உச்சிக்கு சென்று, அவருடன் சென்ற சீரியல் நடிகர் அருண்பிரசாத் எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்திய வனத்துறையினர் நேற்று ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். அப்போது, மலையேற தடை விதித்திருப்பது தங்களுக்கு தெரியாது என விளக்கம் அளித்தாக கூறப்படுகிறது.

Related Stories: