பிரித்விராஜுக்கு அம்மாவாக நடிக்க பயந்தேன்: மீனா தகவல்

சென்னை: நடிகை மீனா தமிழ் சினிமாவில் 80கள் மற்றும் 90களில் பிரபலமான நாயகியாக இருந்தவர். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் அவர் மோகன்லால் உடன் நடித்து திரிஷ்யம் படம் பெரிய ஹிட்டானது. பிறகு மோகன்லால் உடன் மீண்டும் ப்ரோ டாடி என்ற படத்தில் நடித்து இருந்தார் மீனா. முதலில் ப்ரோ டாடி படத்தின் வாய்ப்பு தேடி வந்தபோது, அது என்ன விதமான ரோல் என கேட்டாராம். நடிகர் பிரித்விராஜூக்கு நீங்க தான் அம்மாவா நடிக்கணும் என சொன்னதும் அவர் கடும் அதிர்ச்சி ஆகிவிட்டாராம். வெறும் 6 வயது குறைவான நடிகருக்கு நான் அம்மாவா என தயாரிப்பாளர் ஆன்டனியிடம் ஆதங்கத்துடன் கேட்டாராம் அவர். ‘இருப்பினும் ஸ்கிரிப்ட் எனக்கு பிடித்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். தயாரிப்பாளர் என்னை ஒப்புக்கொள்ள செய்ததால் தான் நான் ஒப்புக்கொண்டேன். படம் பார்க்கும்போது வயது வித்தியாசம் திரையில் தெரியவில்லை. அதற்கு பிரித்விராஜ் தான் காரணம்’’ என மீனா கூறி இருக்கிறார்.

Related Stories: