ஓட்டலில் இலவச உணவு சலுகை தந்த ஷில்பா ஷெட்டி: ஏமாற்றம் அடைந்த நெட்டிசன்கள் கடும் கோபம்

மும்பை: பாலிவுட் முன்னணி நடிகை ஷில்பா ஷெட்டி, மும்பை பாந்த்ரா பகுதியில் இயங்கி வந்த தனது ‘பாஸ்டியன்’ என்ற உணவகத்தை கடந்த 2025 செப்டம்பர் மாதம் மூடிவிட்டார். தற்போது அதே இடத்தில் ‘அம்மா கை’ என்ற பெயரில் தென்னிந்திய மற்றும் மங்களூர் சுவை கொண்ட புதிய உணவகத்தை தொடங்கியுள்ளார். இந்த உணவகத்தின் சார்பில் குடியரசு தினத்தையொட்டி, முதலில் வருபவர்களுக்கு இலவச காலை உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதை தொடர்ந்து, உணவகம் திறப்பதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு, காலை 7 மணி முதல் மக்கள் கூட்டம் குவிய தொடங்கியது. பாந்த்ரா வீதிகளில் பல நூறு மீட்டர்களுக்கு நீண்ட வரிசை காணப்பட்டது. எதிர்பாராத மக்கள் கூட்டத்தால், இலவச சேவை மதியம் 1 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், பலர் உணவு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, ‘இலவச கலாசாரம்’ குறித்து பலத்த விவாதத்தை கிளப்பியுள்ளது. வரிசையில் நின்றவர்களில் பெரும்பாலானோர் வசதியானவர்கள் என்றும், அவர்களால் எளிதாக பணம் கொடுத்து சாப்பிட முடியும் என்றும் குறிப்பிட்டு பலர் விமர்சித்துள்ளனர். எனினும், இது ஒரு வெற்றிகரமான விளம்பர யுக்தி என்றும், இதில் பங்கேற்பதில் எந்த தவறும் இல்லை என்றும் மற்றொரு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Related Stories: