கவர்ச்சி உடை அணியாதது ஏன்? அந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டேன்: சாய் பல்லவி பகீர்

சென்னை: மல்லுவுட்டில் மலர், கோலிவுட்டில் ஆனந்தி, டோலிவுட்டில் புஜ்ஜி, பாலிவுட்டில் சீதை என சாய் பல்லவியை ரசிகர்கள் பல பெயர்களில் கொண்டாடுகின்றனர். இவர் நேச்சுரல் பியூட்டி எனப் பெயர் பெற்றவர். ஏனெனில், நடிகை சாய் பல்லவி மற்ற நடிகைகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவாகவே மேக்கப் பயன்படுத்துகிறார். மேலும், கதாபாத்திரத்திற்கு தேவைப்பட்டால் தவிர, குட்டை ஆடைகளை அணிவதில்லை. குறிப்பாக பொது இடங்கள் மற்றும் விழாக்களுக்குச் செல்லும்போது, தன் உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளையே அணிந்து செல்கிறார். சேலைகளுக்கே அவர் முன்னுரிமை கொடுக்கிறார்.

குட்டை ஆடை அணியாத காரணத்தாலேயே சாய் பல்லவியை பலருக்கும் பிடிக்கும். சினிமா உலகில் இது அரிது. தன் உடல் பாகங்கள் தெரியும்படி ஆடை அணியாததற்கு ஒரு காரணம் இருப்பதாக அவரே கூறியுள்ளார். கல்லூரி நாட்களில் நடந்த ஒரு சம்பவமே தனது இந்த முடிவுக்குக் காரணம் என்கிறார் சாய் பல்லவி. ‘‘கல்லூரியில் ஒரு நடனப் போட்டியில் பங்கேற்றபோது, ஸ்லிட் உடை அணிந்திருந்தேன். எனது நடன வீடியோ இணையத்தில் வைரலானது. ஆனால், அந்த வீடியோவிற்கு வந்த கமெண்ட்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அது தன் மனதை மிகவும் பாதித்தது. அப்போது முதல் இதுபோன்ற உடைகளை அணியக்கூடாது என முடிவு செய்துவிட்டேன். சினிமாவிலும் அதையே தொடர்கிறேன்’’ என்றார்.

Related Stories: