சென்னை: பஸில் ஜோசப் – எல்.கே. அக்ஷய் குமார் ஆகிய இருவரின் நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் நேரடியாக உருவாகி வரும் ‘ராவடி ‘ எனும் திரைப்படம் மலையாளத்திலும் அதே பெயரில் தயாராகி வருவதுடன், இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிக்கிறார். எல்.கே.விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராகியிருக்கிறார்.
