ஒலியை விட 9 மடங்கு வேகமாக செல்லும் ரஷ்யாவின் சிர்கான் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி..!!

மாஸ்கோ: ஒலியை விட 9 மடங்கு வேகமாக சென்று இலக்கை துல்லியமாக தாக்கும் சிர்கான் என்ற அதிநவீன ஹைபர்சோனிக் ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. மேற்கத்திய நாடுகள் உடனான மோதலை எதிர்கொள்ள ரஷ்யா கடந்த சில வருடங்களாக ஹைபர்சோனிக் ஆயுதங்களை தயாரிப்பதில் முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் இலக்கை துல்லியமாக தாக்கும் சிர்கான் எனப்படும் ஹைபர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ரஷ்ய ஆர்டிக்கில்லில் உள்ள வெண் கடலில் நிலைநிறுத்தப்பட்ட அட்மிரல் கோர்ஸ் கோ கப்பலில் இருந்து ஏவப்பட்ட சிர்கான் ஏவுகணை 350 கிலோ மீட்டர் தூரம் சென்று இலக்கை துல்லியமாக தாக்கியதாக தெரிவித்துள்ளது. சிர்கான் ஏவுகணையானது ஆயிரம் கிலோ மீட்டர் வரையிலான இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாகும். இதற்கு முன்னர் கடந்த அக்டோபர் மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் பிறந்தநாளில் சிர்கான் ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டது. ரஷ்யாவில் ராணுவத்தை பலப்படுத்த ஹைபர்சோனிக் ஏவுகணை முக்கிய பங்காற்றும் என்றும் விளாடிமிர் புதின் கூறியிருக்கிறார். …

The post ஒலியை விட 9 மடங்கு வேகமாக செல்லும் ரஷ்யாவின் சிர்கான் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி..!! appeared first on Dinakaran.

Related Stories: