குவைத் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் தற்போது 7ஆக அதிகரிப்பு

குவைத்: குவைத் அடுக்குமாடி குடியிருப்பு தீவிபத்தில் உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது. வீராசாமி மாரியப்பன், முகமது ஷரீப், ரிச்சர்ட் ராய், சிவசங்கர் உள்ளிட்ட 7 தமிழர்கள் உயிரிழந்தனர். குவைத்தின் தெற்குபகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஏராளமானோர் தங்கியுள்ளனர். இந்த நிலையில் கட்டிடத்தின் சமையலறையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் சுமார் 50 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இரண்டு தமிழர்களும் பலியானதாக நேற்று தகவல் வெளியானது. அதன்பின்னர் மேலும் ஒரு தமிழர் பலியாகியிருக்கும் தகவல் கிடைத்தது. ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூர் பகுதியைச் சேர்ந்த கருப்பணன் ராமு, குவைத் தீ விபத்தில் மூச்சுத்திணறி உயிரிழந்து இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை ௭ ஆக அதிகரித்திருப்பதாக இன்று தகவல் வெளியாகி உள்ளது. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

The post குவைத் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் தற்போது 7ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: