‘ஜியோ’வில் ஜீவாவுடன் இணைந்த இவானா

கடந்த 2009ல் ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஜீவா, அனுயா நடித்து யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான படம், ‘எஸ்எம்எஸ்’ என்கிற ‘சிவா மனசுல சக்தி’. தற்போது 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ராஜேஷ்.எம், ஜீவா, யுவன் சங்கர் ராஜா கூட்டணி அமைத்துள்ள படம், ‘ஜியோ’ என்கிற ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’. இப்படத்தின் ஷூட்டிங் சில மாதங்களாக நடந்து வரும் நிலையில், தற்போது இவானா ஒப்பந்தமாகியுள்ளார். மலையாள நடிகையான இவானா, தமிழில் பாலா இயக்கிய ‘நாச்சியார்’ என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோடியாக அறிமுகமானார். தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் ‘ஹீரோ’, பிரதீப் ரங்கநாதனுடன் ‘லவ் டுடே’, ஹரீஷ் கல்யாணுடன் ‘எல்ஜிஎம்’ என்கிற’ லெட்ஸ் கெட் மேரிட்’, வெங்கட் செங்குட்டுவனுடன் ‘மதிமாறன்’, மீண்டும் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் ‘கள்வன்’, மீண்டும் பிரதீப் ரங்கநாதனுடன் ‘டிராகன்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். தெலுங்கில் ‘சிங்கிள்’ என்ற படத்திலும் அவர் நடித்திருந்தார்.

Related Stories: