சிம்பு படத்தில் சந்தானம் காமெடி

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க, வெற்றிமாறன் இயக்கும் ‘அரசன்’ என்ற படத்தில் சிம்பு நடிக்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு மதுரை, கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் நடந்து முடிந்தது. தற்போது சென்னையில் பிரத்தியேக அரங்குகள் அமைத்து, அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இக்கதை, தனுஷ் நடித்த ‘வட சென்னை’ படத்தின் கதைக்களத்தில் நடப்பதால் சமுத்திரக்கனி, ‘ஆடுகளம்’ கிஷோர், பவன், சாய் தீனா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ‘அரசன்’ படத்தை தொடர்ந்து ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அஷ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் சிம்பு நடிக்கிறார். அவரது ஜோடியாக மிருணாள் தாகூர் நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் சந்தானம் நடிக்கிறார். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. டி.வி நிகழ்ச்சியில் பிரபலமாக இருந்த சந்தானத்தை காமெடி நடிகராக்கியவர் சிம்பு என்பதால், அவர் கேட்டுக்கொண்டதற்காக சந்தானம் கண்டிப்பாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.

Related Stories: