‘துரந்தர் 2’, ‘டாக்ஸிக்’ படங்களுக்கு திடீர் சிக்கல்

இந்தியில் உருவான ‘துரந்தர் 2’, பான்வேர்ல்ட் படமான ‘டாக்ஸிக்’ ஆகிய படங்களுக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் இந்திய திரைப்படங்களை ரசிக்கும் பார்வையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புக்குரிய படங்களாக யஷ் நடித்துள்ள ‘டாக்ஸிக்’, ரன்வீர் சிங் நடித்துள்ள ‘துரந்தர் 2’ ஆகிய படங்கள் இருக்கின்றன. வரும் 19ம் தேதி திரைக்கு வரும் இவ்விரு படங்களும் 3 மணி நேரத்துக்கு மேல் ஓடும் என்பது, திரையரங்கு உரிமையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ‘டாக்ஸிக்’ படம் 3 மணி, 25 நிமிடங்கள் ஓடுகிறது.

‘துரந்தர் 2’ படம் 3 மணி, 40 நிமிடங்கள் ஓடுகிறது. ரன்னிங் டைம் 3 மணி நேரத்துக்கு மேல் இருப்பதால், எந்த தியேட்டரிலும் கூடுதல் காட்சிகள் திரையிட முடியாத நிலை ஏற்பட்டுதுள்ளது. ஒரு நாளில் 4 காட்சிகளுக்கு மேல் திரையிட முடியாது. ‘துரந்தர்’ முதல் பாகத்தின் பிரமாண்ட வெற்றியும் மற்றும் ‘கே.ஜி.எஃப்’ படத்தின் 2 பாகங்களின் மாபெரும் வெற்றியும், வரும் 19ம் தேதி வெளியாகும் ‘துரந்தர் 2’, ‘டாக்ஸிக்’ ஆகிய படங்களின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: