ஐயப்பனை மையமாகக் கொண்ட இரண்டு படங்கள்… தலைப்புகளை வெளியிட்டார் வெங்கட் பிரபு

சுவாமி ஐயப்பனை மையமாகக் கொண்டு தந்த்ரா பிலிம்ஸ் தயாரிப்பில் இரண்டு திரைப்படங்கள் உருவாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் ஜே.கே. சரவணா தயாரிக்கும் இந்த படங்களின் தலைப்புகளை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டார். “தத் த்வம் அஸி” எனப் பெயரிடப்பட்டுள்ள முதல் படம் சமகாலத்தை பின்னணியாகக் கொண்ட ஆன்மீக ஆக்ஷன் திரைப்படமாக உருவாகிறது. சுவாமி ஐயப்பன் பக்தரின் வாழ்க்கை மற்றும் அவரது ஆன்மீகப் பயணத்தை மையமாகக் கொண்ட இந்த படத்தை “மாளிகப்புரம்” படத்தை இயக்கிய விஷ்ணு சசி சங்கர் இயக்குகிறார்.

“ஆர்ய கேரள வர்மன்” எனப் பெயரிடப்பட்டுள்ள இரண்டாவது படம் வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் திரைப்படமாகும். சுவாமி ஐயப்பனின் வாழ்க்கை மற்றும் வீரத்தை மையமாகக் கொண்ட இந்த படத்தை ஜே.கே. சரவணா மற்றும் ஆதித்யா தங்கிராலா இணைந்து இயக்குகின்றனர். இந்த இரண்டு படங்களின் தலைப்பு அறிவிப்பு நிகழ்ச்சி சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. “தத் த்வம் அஸி” மற்றும் “ஆர்ய கேரள வர்மன்” திரைப்படங்கள் பான் இந்திய அளவில் பல மொழிகளில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: