கிளாமர் இமேஜ் எனக்கு வேண்டாம்: யாஷிகா ஆனந்த்

சென்னை: வெங்கட் ராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, யாஷிகா ஆனந்த் நடித்துள்ள ‘கடமையை செய்’ என்ற படம் வரும் 12ம் தேதி திரைக்கு வருகிறது. இதில் நடித்தது குறித்து யாஷிகா ஆனந்த் கூறியதாவது: பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு இப்படம் தியேட்டரில் வெளியாகிறது. இக்கதையை நான் கேட்டபோது, என்னால் அந்த நர்ஸ் கேரக்டரில் சிறப் பாக நடிக்க முடியுமா என்று பயந்தேன். ஆனால், ஷூட்டிங்ஸ்பாட்டில் டைரக்டர் ஒவ்வொரு விஷயத்தையும் பொறுமையாகச் சொல்லி என்னை சிறப்பாக நடிக்க வைத்தார்.

எஸ்.ஜே.சூர்யாவும் நடிப்பு சம்பந்தமாக எனக்கு நிறைய டிப்ஸ்  தந்தார். இதுவரை ரசிகர்கள் மத்தியில் எனக்கு கிளாமர் நடிகை என்ற அடையாளம் இருந்தது. அந்த இமேஜ் இப்படத்தின் மூலம் கண்டிப்பாக மாறும் என்று நம்புகிறேன். நர்ஸ் கேரக்டருக்காக நான் கடுமையாக உழைத்துள்ளேன். இனி என் நடிப்பை வெளிப்படுத்தும் வகையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

Related Stories: