குறிப்பிட்ட இரண்டு நடிகர்களை தாக்கினேனா? – விக்னேஷ் கார்த்திக்

விக்னேஷ் கார்த்திக் எழுதி இயக்கி நடித்து வெளியான ‘ஹாட் ஸ்பாட் 2மச்’ என்ற படம் வரவேற்பு பெற்றுள்ளது. இதில் அஸ்வின் குமார் லட்சுமிகாந்தன், பிரியா பவானி சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமய்யா, ஆதித்யா பாஸ்கர், ரக்‌ஷன், பவானிஸ்ரீ, பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி நடித்திருந்தனர். விக்னேஷ் கார்த்திக் கூறுகையில், ‘இப்படத்தின் விமர்சனங்களில், நாங்கள் இரண்டு குறிப்பிட்ட நட்சத்திரங்களின் ரசிகர்களை சுட்டிக்காட்டினோம் என்று சொல்லியிருந்தனர். அது தவறு. பொதுவான ரசிகர்களை பற்றிய பார்வை இது. அதை இரண்டு நடிகர்களின் வழியாக சொன்னால் நன்றாக இருக்கும், எளிதில் புரியும் என்பதற்காகவே விவரித்தோம்.

ரசிகர்களின் கோணத்தில் அவர்களுடைய உணர்வாக பேசியிருக்கிறோமே தவிர, குறிப்பிட்ட இரண்டு நட்சத்திரங்களின் ரசிகர்களை பற்றி நாங்கள் ஒருபோதும் எங்கும் குறிப்பிடவில்லை. தம்பி ராமய்யா பேசும் வசனங்கள் தொடர்பாகவும் இணையத்தில் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் விமர்சனங்கள் வந்துள்ளது. ஒரு படம் பிடித்திருக்கிறது என்பதும், பிடிக்கவே இல்லை என்பதும் படத்தை பார்த்த ரசிகர்களின் தனிப்பட்ட கருத்து. அதை நாங்கள் மதிக்கிறோம், வரவேற்கிறோம். ஒரு படைப்பை பற்றிய விமர்சனங்களை முன்வைப்பதற்கு எப்படி பார்வையாளர்களுக்கு முழு உரிமை இருக்கிறதோ, அதுபோல் ஒரு படைப்பை எப்படி வழங்க வேண்டும் என்ற விஷயத்தில், படைப்பாளனாகிய எனக்கும் முழு உரிமை இருக்கிறது’ என்றார்.

Related Stories: