2027 ஏப்ரல் 7ல் ரிலீசாகும் ‘வாரணாசி’

உலக அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம், ‘வாரணாசி’. மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமாரன், பிரகாஷ்ராஜ் நடிக்கின்றனர். எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்க, எம்.எம்.கீரவாணி இசை அமைக்கிறார். பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் 2027ல் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டாலும், எந்த தேதியில் வெளியாகும் என்பது தெரிவிக்கப்படாமல் இருந்தது.

தற்போது வாரணாசியில் ஒரு பேனர் வைக்கப்பட்டு, படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 2027 ஏப்ரல் 7ம் தேதி படம் உலகம் முழுவதும் திரைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐமேக்ஸ் கேமராவில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: