இன்ஸ்டாகிராமில் பணம் குவிக்கும் ஸ்டார்ஸ்

பாலிவுட் நடிகர், நடிகைகள் இன்ஸ்டாகிராமில் பல்வேறு பிராண்டுகளை விளம்பரம் செய்ய கோடிக்கணக்கில் பணம் வாங்குகின்றனர். சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு ஏறக்குறைய 80 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை வாங்குகிறார். ஷாருக்கானை 2.7 கோடிக்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர். பிரியங்கா சோப்ராவை இன்ஸ்டாகிராமில் 7.3 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இவர் ஒரு பதிவிற்கு ஏறக்குறைய 1.8 கோடி ரூபாய் வாங்குகிறார்.

ஆலியா பட்டை இன்ஸ்டாகிராமில் 5.8 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இவர் ஒரு பதிவிற்கு ஏறக்குறைய 1 கோடி ரூபாய் வாங்குகிறார். பாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகையான தீபிகா படுகோனேவை இன்ஸ்டாகிராமில் 6.4 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இவர் ஏறக்குறைய 1.5 கோடி ரூபாய் வரை ஒரு பதிவிற்கு வாங்குகிறார்.

Related Stories: